• Fri. Apr 26th, 2024

முத்துகுமார்

  • Home
  • பொள்ளாச்சியில் பேருந்து வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்..!

பொள்ளாச்சியில் பேருந்து வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்..!

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் பயணிகளுக்கு போதிய பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் வால்பாறையில் இருந்து வெளியூர் சென்று வசிக்கும் பொதுமக்கள் பொள்ளாச்சி புதிய பேருந்து…

பொள்ளாட்சியில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!

பொள்ளாச்சி மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பொள்ளாச்சியில் உள்ள ஏழு பேரூராட்சிகளில் காலை 7 மணி முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பொள்ளாச்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில்…

ஆனைமலையில் கோலாகலமாக நடைபெற்ற குண்டம் திருவிழா!

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. குண்டம் திருவிழாவின் ஒரு பகுதியான மயான பூஜை கடந்த 14ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 16ம் தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை சுமார் 9 மணியளவில் தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன்,  புலவர் லோகநாதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி விட்டார். அதன் பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் ஆகியோரைத் தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர். கொடியேற்றம் நாளில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வேண்டுதலை நிறைவேற்றினர். குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவர்கள், நர்சுகள் அங்கு அவசர தேவைகளுக்காக பணியமர்த்தப்பட்டனர்.  குண்டம் திருவிழாவுக்கென அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. வால்பாறை சரக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்ன காமணன், பரமேஸ்வரன், செல்வராஜ், கார்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார்,  தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், பெண் போலீசார்,  போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாளை (18ம் தேதி)  கொடி இறக்குதல்,  மஞ்சள் நீராடல்,  மகா முனி பூஜை  ஆகிய…

பொள்ளாச்சியில் நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் நகர்புற தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் சுபாஷினி அவர்களின் தலைமையில் கொடி அசைத்து கொடி…

மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது, இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில்…

பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் விநியோகம்!

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் சிவசாமி தனது மனைவிக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிக்கும் போது பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வினியோகம் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து தகவலறிந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி…

மதமாற்றம் செய்வோரை தண்டிக்க மாசாணி அம்மன் கோவிலில் வழிபாடு!

திருப்பூர் மாவட்டம் சிவசேனா கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில், தமிழகத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் அவமதித்தும், இந்து விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், இந்து திருக்கோவில்கள் இடிப்பவர்கள், இந்துக்களை மதமாற்றம் செய்பவர்களை தண்டிக்க வேண்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு…

பொள்ளாச்சியில் வாகன சோதனையில் ரூபாய் 69,900 பறிமுதல்!

தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஆணை பிறப்பித்து இருந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் பொள்ளாச்சி-கோவை சாலை, உடுமலை சாலை மற்றும் முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை சாலை பறக்கும் படையினர் உடுமலையிலிருந்து…

தன் மகனுக்காக பொதுமக்களிடம் ஓட்டு கேட்கும் விஞ்ஞானி!

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மையம், எஸ்டிபிஐ மற்றும் கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் மக்கள் நீதி மையம் சார்பில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.…

இடம் இருக்கு, பட்டா கொடுங்க! – பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மக்கள் மனு!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்டது கம்பாலபட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி குகக்கிராம மக்கள் இலவச பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி,…