டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சற்றுமுன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விசாரணைக்காக 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், தற்போது அவரை ED கைது செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில்…
தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு அவசர மனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி. தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். “இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை…
கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை. பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரது இல்லத்திற்கே சென்று அதிகாரிகள் விசாரணை. கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்திருந்தது.
விஜயகாந்த் இல்லாமல் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறேன்
விஜயகாந்த் இல்லாமல் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறேன் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் நாளை (மார்ச்22) வெளியிடப்படும். மார்ச் 24-ம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் பரப்புரையை தேமுதிக தொடங்குகிறது. மார்ச் 25-ம் தேதி தேமுதிக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய…
40 தொகுதிகளும் திமுகவை ஆதரிப்போம் – நடிகர் கருணாஸ்
“மத்தியில் பாஜகவை வீழ்த்த, மாநிலத்தில் அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது; அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும்; மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க,…
பாமக போட்டியிடும் 10 தொகுதிகள்
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மயிலாடுதுறை, திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய 10 மக்களவைத் தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு அறிவிப்பு
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 13ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை. ஆசிரியர்கள் மாணவர்களின்…
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு செல்வப்பெருந்தகை தகவல்
ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளோம். வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.
அனைவருக்கும் விடுமுறை, மீறினால் நடவடிக்கை. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.!!?
இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற…