• Fri. Sep 29th, 2023

ஆகஸ்ட் 20 – அதிமுக மாநாட்டிற்கு பாதுகாப்புடன் வந்து செல்ல தாயுள்ளத்தோடு தனி அக்கறை காட்டி வருகிறார் எடப்பாடி.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..!

ஆகஸ்ட் மாதம்  20 ம் தேதி நடைபெறும் மாநாட்டில் குடும்பம் குடும்பமாக பங்கேற்கும் அனைவரும் பாதுகாப்புடன் வந்துசெல்ல தாயுள்ளத்தோடு தனி அக்கறை காட்டி வருகிறார் எடப்பாடியார் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். 
இது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,
உலகத்திலே ஏழை, எளியவர்களுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை 17.10.1972ல் பாரத ரத்னா புரட்சித்தலைவர் நிறுவினார். இந்த மகத்தான மக்கள் இயக்கம் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவையை செய்து மகத்தான முத்திரை பதித்து வருகிறது. 
புரட்சித்தலைவர் மறைவிற்குப் பிறகு  புரட்சித்தலைவி அம்மா இந்தியாவில் மூன்றாவது மாபெரும் மக்கள் இயக்கமாக கழகத்தை உயர்த்திக் காட்டினார். அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய எதிர்காலமும், சாமானிய மக்கள் எதிர்காலம் என்னவாகும் என்ற நிலையில், கலங்கரை விளக்கமாக, மூன்றாம் தலைமுறையாக இயக்கத்திற்கு கிடைத்தார் எடப்பாடியார். 
கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 2 கோடியே 44ஆயிரம் உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டு, அவருடைய வழிகாட்டுதலில் மதுரையில் நடைபெறுகிற இந்த வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு இன்றைக்கு அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் வகையில், உலக சாதனை படைக்கப் போகிறது. ஒவ்வொரு நகர்களையும், அங்குலம் அங்குலமாக தன்னுடைய நேரடி வழிகாட்டுதலோடு, அறிவுரைகளோடு அந்த பணிகளை எடப்பாடியார் முன்னெடுத்துச் செல்கிறார்.

அந்த எழுச்சி மாநாட்டில் எடப்பாடியார் ஆற்ற இருக்கிற வீர உரையை, உலக தலைவர்கள் ஆட்சியை, வரலாற்று புரட்சிகளை நினைவு கூறுகிற வகையிலே, மீண்டும் ஜனநாயகத்தை தமிழகத்தை வளர செய்யும் அமையும்.
இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் 38 வருவாய் மாவட்டங்களில் உள்ள, கழக ரீதியில் உள்ள 75 மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், இளைஞர்கள், விவசாயிகள் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக பங்கேற்கிற போது அவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்திருக்கிறார். ஒவ்வொரு தொண்டர்களும் எள் முனையளவு எந்த பாதிப்பும் இல்லாமல், இல்லம் திரும்ப வேண்டும் என்று ஒவ்வொரு தொண்டருக்கும் ஒரு பாதுகாப்பு வழங்க வேண்டும். அங்கே பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதிலே அவர் காட்டுகின்ற அக்கறையை தான் இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் மகத்தான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இந்த மாநாடு அரசியல் வரலாற்றிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும், வாரிசு அரசியலை, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் ஜனநாயகத்தை செய்யும். எத்தனை லட்சம் பேர்கள் வந்தாலும் அவர்களுக்கு குடிநீர் வசதி, உணவு வசதி அதைவிட முக்கியமாக மருத்துவகுழு, தீயணைப்பு வாகனங்கள், தயார் நிலையில் வெயிலின் தாக்கம் இருக்கக் கூடாது என்பதற்காக பந்தல், உணவுக்கூடம் அருகே பந்தல் என அனைத்தையும் தாயகத்தோடு எடப்பாடியார் செய்து வருகிறார்
இந்த சர்வாதிகார வாரிசு அரசியல், குடும்ப அரசியல் இருந்து மீண்டும் ஜனநாயக ஆட்சி மலர எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலர அதற்கான கால்கோள் விழா தான் இந்த வீர வரலாற்றின் பொன் விழா மாநாடாகும். அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் எடப்பாடியாரின் தலைமை உரையை, எழுச்சி உரையை, வீர உரையை வரலாற்று உரையை, உலகெங்கும் எடுத்துச் சென்று இந்த தாய் தமிழ்நாட்டிற்கு மீண்டும் உயிர் கொடுப்போம் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *