• Fri. May 3rd, 2024

வேலுநாச்சியார் உருவத்தில் நிர்மலா சீதாராமனைப் பார்க்கிறோம்.., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி..!

ByKalamegam Viswanathan

Aug 11, 2023
சிவகங்கையின் வெற்றி வீராங்கனை வேலுநாச்சியாரின் உருவத்தில் நிர்மலா சீதாராமனை பார்க்கிறோம் எனவேலுநாச்சியாரின்பெயரை கூட தெரியாமல் திணறிய  -முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார். 
வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டனர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது..,
மாநாட்டில் பங்கேற்கும் மக்கள் அமர்வதற்காக காங்கிரீட் தளங்கள் போடப்பட்டுள்ளது. 25 லட்சம் மக்கள் எதிர்பார்க்கிறோம். திமுக அரசாங்கம் வாகனங்களை கொடுப்பதில் எந்தெந்த வழிகளில் முடியுமோ அந்த வழிகளில் தடுக்கிறார்கள். அதையும் மீறி இந்த மாநாடு நிச்சயம் வெற்றி அடையும்.
மாநாடு அமைவது குறித்த கேள்விக்கு:
இதுவரை நடைபெற்ற எந்த மாநாடாக இருந்தாலும் சரி ஆனால் இது ஒன்றரை கோடியாக இருந்த இயக்கத்தை இரண்டு கோடி உறுப்பினர்களாக சேர்த்திருக்கும் பெருமையை எடப்பாடியார் செய்திருக்கிறார்.
மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்த கேள்விக்கு:
நாம சிவகங்கை பக்கத்திலே இருக்கிறோம் அந்த ராணி யார் என கேட்டு பின்னர் என சிவகங்கையின் வெற்றி வீராங்கனை வேலுநாச்சியாரின் உருவத்தில் நிர்மலா சீதாராமனை பார்க்கிறோம். மக்களவையில் தமிழில் பேசி பேடிகளாக இருப்பவர்கள் வெளியேறுங்கள், உண்மையான தமிழக எம்பிக்கள் அமருங்கள் என்று சொல்லி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை மற்றும் 89 எதிர்க்கட்சியாக இருந்த ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்த திமுகவின் எம்பிக்கள் வந்திருக்கிறீர்கள். சட்டசபையில் தான் இட்ட சபதத்தை நிறைவேற்றி முதல்வராக சட்டசபைக்கு வந்தார் ஜெயலலிதா. ஆனால் இன்று நீங்கள் திரௌபதியை பற்றி பேசுகிறீர்கள் என்று திமுகவை தாக்கி பேசிய வேலுநாச்சியார் அதற்கு அடுத்து ஜெயலலிதா அதற்கு அடுத்தபடியாக நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எங்கள் அன்பான வணக்கம் மற்றும் மரியாதையை செலுத்துகிறோம்.
மாநாட்டிற்கு திரைப்பட பிரபலங்களுக்கு அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு:
அது குறித்து நீங்கள் பொதுச் செயலாளர் அறிவிப்பார் இல்லையென்றால் திமுகவினர் தடுத்து அவர்களுக்கு ஏதாவது ஆபத்தை விளைவிப்பார்கள்.
முதல்வருக்கான புகைப்பட கண்காட்சி போல அதிமுக கண்காட்சி அமையுமா என்ற கேள்விக்கு:
அவர்களைப் பார்த்து காப்பி அடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை திரைப்படத்தால் உருவான கட்சி எங்கள் கட்சி. பொன்விழா மாநாட்டை சுட்டிக்காட்டும் விதமாக 51 அடியில் கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளது எனப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *