

சென்னை அசோக் நகர் சிவலிங்கபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகத்தம்மன் கோவிலில் 47-வது ஆடி மாத திருவிழா நடைபெற்றது.
கடந்த 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற, இந்த திருவிழாவில்
நாகத்தம்மனுக்கு பால் அபிஷேகம், மற்றும் சிறப்பு அலங்கார பூஜை, சந்தன காப்பு அலங்காரம், கூல் படைத்து ஊற்றுதல் மற்றும் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த திருவிழாவுக்கு அதனை சுற்றி உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்று, நாகாத்தம்மனை தரிசித்து சென்றனர்.

