• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடி பெற்ற பரிசு பொருட்கள் ஏலம்

ByA.Tamilselvan

Sep 12, 2022

பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த பரிசு பொருட்கள் அவ்வப்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன.
டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் இந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரத்யேக இணையதளம் ஒன்றின் வழியாக ஏலம் நடக்கிறது. அக்டோபர் 2-ந் தேதி ஏலம் முடிவடைகிறது. பரிசு பொருட்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம்வரை இருக்கிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ளது. இந்தநிலையில், 4-வது தடவையாக, வருகிற 17-ந் தேதி ஏலம் தொடங்குகிறது. 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.