ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து ஆசிரியர்களும் எழுத வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய புதுச்சேரி அரசு கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் அனைத்து நிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து நிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கி வரும் பாட புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள் மற்றும் தையல் கூலி முதலியவற்றை காலத்தோடு வழங்கிட வேண்டும்.
CBSE பாடத் திட்டமானது தற்பொழுது புதுச்சேரி அரசு பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது.

மேலும் அதற்கான கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள், சேர்க்கை பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகள் அனைத்தும் CBSE விதிமுறைகளின் படி நடக்கும்போது, ஆசிரியர்களுக்கு உரிய ஆண்டு விடுப்புகளை அரசானது கடந்த ஆண்டு குறைத்து விட்டது. ஆகவே CBSE விதிமுறைகளின் படி ஆண்டு இறுதித் தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர்களுக்கு உரிய விடுப்பினை வழங்கிட வேண்டும். கல்வித்துறையில் காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், விரிவுரையாளர்கள் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போன்ற அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் விரைந்து நிரப்பிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து நிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.











; ?>)
; ?>)
; ?>)