தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம், மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் ஆலோசனையின் படி தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியின் கீழ் செயல்படும் மின் மயானத்தை சரி செய்ய வலியுறுத்தியும், கடமலை மயிலை ஒன்றியம் உப்புத்துறை ஜே ஜே நகர் இந்திரா பகுதியில் குடியிருக்கும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை சரி செய்ய கோரியும் மெய்வழி மக்கள் இயக்கம், மெய்வழி சட்ட மையம் தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் தினேஷ், அவைத்தலைவர் முத்து, தொழிற்சங்க தலைவர் காளிதாஸ், இளைஞரணி தலைவர் ஈஸ்வரன், மகளிர் அணி செயலாளர் விஜயா, நகரச் செயலாளர் அருள் பாண்டி, கணேசன், வேல்சாமி, விஜி, பூங்கொடி, பாண்டியம்மாள், முத்தையா குணா, விமலா, இந்திரா மற்றும் பழங்குடியின மக்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.