• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெற்ற குழந்தையை பார்க்க அனுமதிக்காத மனைவி- கணவன் தற்கொலை முயற்சி!..

Byகுமார்

Oct 14, 2021

மதுரை எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்பகுதியில் சென்ற வாக ஒட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். ஒரு சிலர் காவல்துறையினரும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதில் ஒரு வாலிபர் தைரியமாக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாலத்தின் மேல் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை மீட்டுள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

விசாரணையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர், மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த லெனின் குமார் என்பவர். இவருக்கு குழந்தை பிறந்ததாகவும் குழந்தையை பார்க்க மனைவி குடும்பத்தார் அனுமதி மறுத்ததாகவும், இதனால் மனம் உடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.