தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே நகையை மீட்டுத் தரக் கோரி பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஆண்டிப்பட்டி தாலுகா மூலக்கடை கிராமத்தைச் சேர்ந்த லிங்கராஜ் மனைவி நிரஞ்சனா தேவி (32 ), இவரிடம் ஆண்டிபட்டி அணைக்கரைப்பட்டி சேர்ந்த காவலர் பிரபாகரன், கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்.

இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நிரஞ்சனா தேவியிடம், சுமார் 25 பவுன் தங்க நகையை அவரிடம் கொடுத்துள்ளார். அவர் நகையை பெற்றுக் கொண்டு அடகு வைத்து விட்டு திரும்பி தராததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி நகையை திருப்பி பெற்று தர வேண்டிய தன்னுடைய உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயறசி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

உடனடியாக காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி கானா விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.