கோவையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஒரு மத மோதல் சம்பவத்தில் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

2019-ஆம் ஆண்டு சிவானந்தா காலனியில் நடந்த மத மோதலில், ராதாகிருஷ்ணன் என்பவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் தங்கராஜ் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்துக் கொண்டார். இது தொடர்பாக, ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கோவை முதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நிலையில் இன்று இந்த வழக்கை வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி, குற்றம் சாட்டப்பட்ட ராதாகிருஷ்ணன் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
அதோடு, 2 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும், இரண்டு பிரிவுகளில் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.