• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் கைநாட்டு முறையை ஒழிக்கும் முயற்சி : அன்பில் மகேஷ்!

Byமதி

Dec 13, 2021

கிராமப்புறங்களில் பள்ளி சாரா கல்வி இயக்கம் மூலமாக கைநாட்டு முறையை ஒழித்து அனைவருக்கும் கையெழுத்து போட கற்று கொடுக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் பகுதியில், உள்ள சிஎஸ்ஐ தூய பெத்ரூ ஆலயத்தில் 10,00 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 மாவட்டங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம், அமோக வரவேற்பை பெற்றுள்ளதாகவும், ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் கூறினார். அதே போல, கிராமப்புறங்களில் பள்ளி சாரா கல்வி இயக்கம் மூலமாக கைநாட்டு முறையை ஒழித்து அனைவருக்கும் கையெழுத்து போட கற்று கொடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.