• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அதர்வா சுசூகி பெஸ்ட் வேல்யூ ஷோரூம் துவக்கம்..,

BySeenu

Mar 28, 2026

சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்வதற்காக ‘சுஸூகி பெஸ்ட் வேல்யூ’ (Suzuki Best Value) என்ற பெயரில் தனிப்பிரிவை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சுசூகி பெஸ்ட் வேல்யூ ஷோரூம் தனது அங்கீகரிக்கப்பட்ட அதர்வா டீலர் மூலமாக அதர்வா பெஸ்ட் வேல்யூ விற்பனை மையத்தை கோவையில் முதன் முறையாக செல்வபுரம் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.

அதர்வா சுசுகியின் நிர்வாக இயக்குனர் ராஜூ தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், சுசூகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு துணை தலைவர் (Deepak Mutreja) தீபக் முத்ரேஜா மற்றும் சுசூகி பெஸ்ட் வால்யூவின் தேசிய தலைவர் (Sanjay Yadav) சஞ்சய் யாதவ் ஆகியோர் இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய ஷோரூமை திறந்து வைத்தனர்.

சுசூகி பெஸ்ட் வேல்யூ குறித்து நிர்வாகிகள் கூறுகையில்,வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய சுஸூகி அல்லது மற்ற நிறுவன வாகனங்களை பெஸ்ட் வேல்யூவில் கொடுத்துவிட்டு, புதிய சுஸூகி வாகனங்களை ‘எக்ஸ்சேஞ்ச்’ முறையில் வாங்கிக் கொள்ளலாம்.

பழைய வாகனங்கள் சுஸூகி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக்குகள் மூலம் வாகனம் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்படும் என தெரிவித்தனர்..

குறிப்பாக இந்த ஷோரூம்களில் விற்கப்படும் பழைய வாகனங்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை நிறுவனத்தின் உத்தரவாதம் வழங்கப்படுவதுடன், சில குறிப்பிட்ட வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் சலுகைகளும் வழங்குவதாக தெரிவித்தனர்..

வாகனத்தின் தரம் மற்றும் நிலையைப் பொறுத்து வெளிப்படைத்தன்மையுடன் சரியான சந்தை விலை நிர்ணயிக்கப்படுவதால், பழைய வாகனங்களை விற்பனை செய்யும் போது தகுந்த விலை கிடைக்கும் என தெரிவித்தனர்.

மேலும் பழைய வாகனங்களை வாங்குபவர்கள் பெயர் மாற்றம் மற்றும் பிற ஆவண வேலைகளை ஷோரூம் ஊழியர்களே கவனித்துக் கொள்வதோடு,பழைய வாகனங்களுக்குக் கடன் வசதிகளை எளிமையாக பெற்று கொள்ளலாம் தெரிவித்தனர்.