• Thu. May 9th, 2024

புத்தகத் திருவிழாவில் முனைவர் செள. வீரலெக்ஷ்மி எழுதிய சங்க இலக்கியங்களில் பெண்களின் உணர்வு சார் நுண்ணறிவு…

Byகுமார்

Oct 23, 2023

மதுரை புத்தகத் திருவிழாவில் முனைவர் செள. வீரலெக்ஷ்மி எழுதிய சங்க இலக்கியங்களில் பெண்களின் உணர்வு சார் நுண்ணறிவு
என்னும் நூல் யாவரும் பதிப்பகத்தின் வழியாக புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை புத்தகத் திருவிழா 2023நடைபெற்று வருகிறது இந்த புத்தகத் திருவிழாவில் முனைவர் சௌ. வீரலெக்ஷ்மி எழுதிய “சங்க இலக்கியங்களில் பெண்களின் உணர்வு சார் நுண்ணறிவு” என்னும் நூல் யாவரும் பதிப்பகத்தின் வழியாக புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
நூல்வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் நூலை வெளியிட்டார்
ஆவணப்பட இயக்குநர் நிறுவனர், திருநங்கையர் ஆவண மையம் எழுத்தாளர் பிரியா பாபு நூலைப் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நூல் ஆசிரியர் தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை பேராசிரியர் முனைவர் செள. வீரலெஷ்மி. சங்க இலக்கியங்களில் பெண்களின் உணர்வுசார் நுண்ணறிவு என்ற நூலின் மூலம் சங்க காலத்திலேயே தமிழர்கள் உணர்வுசார் நுண்ணறிவுத் திறன் பெற்றிருந்தனர் என்பதை இந்நூல் உறுதி செய்கிறது. அதிலும் அக வாழ்க்கை, குடும்பம் என்ற அமைப்பு முறை தமிழர்களிடம் காலம் காலமாக நிலைத்து நிற்க தமிழ்ப்பெண்களின் உணர்வு சார் நுண்ணறிவுத் திறன் உறுதுணையாய் இருந்தது என்பதை, சங்க அகப்பாடல்களை ஆய்வு செய்து வெளிப்படுத்தி இருக்கிறது. இத்தகைய ஆய்வு நூல் தமிழில் வெளி வருவது இதுவே முதல் முறையாகும்.நூல் வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாட்டினை முனைவர் சரவணஜோதி செய்திருந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *