சிவகங்கையில் 27 வது பிறந்தநாளை கொண்டாடும் மன்னர் குடும்ப வாரிசு இளைய மன்னர் ஆதித்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சேதுபதி மன்னர்களுக்கு நீண்ட வரலாறு உண்டு வம்சா வழியாக வந்த பாஸ்கரை சேதுபதியின் மகன் பாண்டி மகாராஜாவின் கொள்ளு பேரன் நான் என அறிமுகப்படுத்திக் கொண்டார். சேதுபதி மன்னரின் வரலாறு கேட்டு வளர்ந்த நான் அவர்களைப் போலவே மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன். அதன் விளைவாக இரண்டு ஆண்டு திட்டமிட்டு சேதுபதி அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் ரெண்டு திட்டங்கள் கொண்டு வர முயற்சிக்கிறோம். பாண்டி மகாராஜா திட்டம் கிராமத்தில் இருக்கின்ற வறுமை கேட்டு கீழ் உள்ள மாணவர்களுக்கு படிப்பதற்கு நிதி உதவி வழங்குவது TNPSC இலவச பயிற்சி வகுப்பு நடத்துவது என செயல்படுத்தியுள்ளோம். இரண்டாவதாக வேலுநாச்சியார் திட்டம் கிராமப்புற மகளுக்கு டெய்லரிங், டைப்பிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பயிற்சியை இலவசமாக வழங்கியுள்ளோம்.

சிவகங்கையில் அறக்கட்டளையைஆரம்பித்து சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் என 4 மாவட்டங்களில் நடத்த போகிறோம் . அறக்கட்டளை இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெற கேட்டு கொண்டார், தொடர்ந்து சமூக சேவைகளை செய்ய விரும்புகிறேன் என்றவர் ஒரு சமுதாயம் மேலோங்க வேண்டுமென்றால் படிப்பு அவசியம். அதற்காகத்தான் படிப்புக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்றார். நேர்மையான முறையில் படிக்க வைக்க வேண்டும். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது அறக்கட்டளையின் நோக்கம். அரசியலுக்கு பொறுப்பு அதிகம். அரசியலில் எதிர்காலத்தில் எப்படியும் மாறலாம் என்றார். படிப்பு மாணவர்கள் தான் முதலில் இதில் அரசியலை உண்டாக்க வேண்டாம் என்றார்.
