• Sun. May 5th, 2024

சேலம் கூட்டுறவு சங்க வார விழாவில், அமைச்சர் கே.என்.நேரு…

சேலத்தில் அனைத்திந்திய 70 வது கூட்டுறவு சங்க வார விழா அழகாபுரம் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற விழாவில் 3024 பயனாளிகளுக்கு ரூ.33.99 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் குறிப்பாக பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவி குழு கடன், வீட்டு வசதி கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் தொகை பயனளிகளுக்கு வழங்கப்பட்டது மேலும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட 39 கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளும், பாராட்டுக் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் கலைஞர் அவர்களின் ஆட்சிகாலத்தில் 1996 ஆம் ஆண்டு விவசாயிகள் வாங்கிய கடன் தொகையை ரூ.7500 கோடியை முழுமையாக ரத்து செய்தார் விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கியதோடு 600க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளும், 12,500 நியாய விலை கடைகளும், 3 மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன மேலும் ரூ.20000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உள்ளார் எனவும் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய கடன் தொகைகளை நபார்டு வங்கியின் மூலம் 9 சதவீதத்திற்கு கடனாக பெற்று விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டது எனவும் தமிழ்நாட்டில் உள்ள 45,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 1500 வங்கிகளில் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு டெபாசிட் தொகை வைத்துள்ளது என கூறினார்.மேலும் மீதமுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரசிடமிருந்து நிதியினை பெற்று இயங்கி வருகிறது அதன் மூலம் 126 நகர வங்கிகளும், 70 நிலவள வங்கிகள், 23 மத்திய வங்கிகளும், ஒரு மாநில வங்கியும் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர், சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மீராபாய், சரக துணை பதிவாளர் முத்து விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *