• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குறைந்தது தக்காளி விலை…மக்கள் குதூகலம்

Byகாயத்ரி

Nov 26, 2021

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகம் பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. அந்தவகையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 4 நாட்களாக 1 கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் 50 ரூபாய் குறைந்து நேற்று ரூபாய் 90 க்கு விற்பனை செய்யப்பட்டது.


இந்நிலையில் இன்று தக்காளி அதிரடியாக 100 ரூபாய் குறைந்தது. இதனால் மொத்த விற்பனை 30 முதல் 35 வரை சிறுமொத்த கடைகளில் தக்காளி 1கிலோ 40 ரூபாய்க்கு இன்று காலை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இதுவே ஒரு பெட்டியாக வாங்கினால் 30 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும். தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வேறொரு காரணமும் உள்ளது. அதாவது இன்று வழக்கமாக ஆந்திரா, கர்நாடக, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தக்காளி வந்தது. அதன்படி இந்த மாநிலங்களில் இருந்து மொத்தம் 58 வன்டிகளில் சுமார் 850 டன் தக்காளி வந்துள்ள நிலையில் வியாபாரம் இன்று களைகட்ட தொடங்கியுள்ளது.