• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நாளை மறுநாள் கூடுகிறது சட்டமன்றம்!

தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்திய வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று முழு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.231.9 கோடி அதிகம். அத்துடன் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை வாசித்து முடித்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். 1 மணி நேரம் 55 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை அவர் வாசித்துள்ளார். நாளை விடுமுறை என்பதால் சட்டமன்றம் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.