• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாஜக நிர்வாகி படுகொலை- பாஜக தலைவரின் கார் மீது தாக்குதல்

ByA.Tamilselvan

Jul 27, 2022

கர்நாடகவில் மர்மநபர்களால் பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார்.அவரின் இறுதி ஊர்வலத்தில் பாஜக தலைவரின் கார் மீது தாக்குதல்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா, நெட்டாறு பகுதியில் பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவீன்(வயது 32), நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், பிரவீன் நெட்டாரு இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. ஊர்வலத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பதற்றம் உருவானது. இதையடுத்து சுள்ளியா தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை நள்ளிரவு வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.