புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னவாசல் மைய ஒன்றியம் வயலோகம் கிராமத்தில் வசிக்கக்கூடிய ஆதிராவிட மக்களுக்கு குடி இருக்க வீட்டு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

அந்த மக்கள் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளான முகாம் செயலாளர்கள் ஆகியோர்கள் வயலோகம் கிராமத்திற்கு நேரடியாக சென்று அவர்களின் பிரச்சனைகளை மக்களிடம் நேரடியாக கேட்டு அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா இல்லாமல் ஒரே குடும்பத்தில் நான்கு குடும்பம் வசிக்கக்கூடிய நிலை உள்ளது. ஆகையினால் நிறைவேற்று தருமாறு மாவட்ட செயலாளர் தன்னிடம் கோரிக்கை வைத்தார்கள்.

உடனடியாக நேற்றைய தினம் 06.07.2025 அவர்கள் கிராமத்திற்கு நேரடியாக சென்று அந்த மக்களின் கோரிக்கையை கேட்டு அறிந்து முகாம் சீரமைக்கப்பட்டு புதிதாக 25 பெண்களுக்கு மேல் கட்சியில் இணைத்து தன்னை விடுதலை சிறுத்தைகளாக இணைத்துக் கொண்டார்கள். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அவர்களை இன்று நேரடியாக சந்தித்து எனது தலைமையில் மனு அளித்தோம். மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக கோரிக்கையை ஏற்று நிறைவேற்றித் தருகிறேன் என்று உறுதி அளித்தார்.
- மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா* அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மகிழ்வுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.கரு. வெள்ளைநெஞ்சன் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர்🙏