• Thu. Jan 23rd, 2025

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி.. தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்..

Byகாயத்ரி

Jul 29, 2022

சென்னையில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் சென்னையில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக தமிழ்நாடு அரசு செய்ததாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆசிய கடற்கரை போட்டிகளை தமிழ்நாட்டில் நடந்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கொள்கை அளவில் ஏற்றதையும் தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.