காதலன் ஆர்யனுடன் எடுத்த புகைப்படத்தை நடிகை ஷபானா வெளியிட்டுள்ளார்.
ஜீ தமிழிலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் நாடக தொடர் செம்பருத்தி. இதில் நடிகை ப்ரியா ராமன், ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர். இந்த நாடக தொடரின் மூலம் பிரபலமடைந்த ஷபானா மற்றும் பாக்கியலஷ்மி நாடக தொடரில் மூத்த மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றார்கள்.
இந்நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை எப்போது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யனுடன் இருக்கும் புகைகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.