• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அருப்புக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-வாலிபர் கைது

ByKalamegam Viswanathan

Feb 17, 2023

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22). கூலி வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தபோது தான், அவருக்கு பாலியல் கொடுமை நடந்திருப்பது தெரிந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்த போது அரவிந்தும், அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரவிந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாக இருக்கும் அரவிந்தின் நண்பரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.