
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடல் முன்பு நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவிற்கு மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், தாமரை பாரதி ஆகியோர் பேசிய பின்,

நாஞ்சில் சம்பத் கலைஞர் கருணாநிதிக்கு அவர் வரிசை படுத்திய உவமைகள் கேட்போரை எல்லாம் திகைக்க செய்தது.நாகர்கோவிலில் பல ஆண்டுகளுக்கு பின், இன்று நான் தி மு க மேடையில் நிற்பதற்கு களம் அமைத்து தந்தது.கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயரும் ஆன என் தம்பி மகேஷ் என்றவர்.அவரது மாணவ காலத்து மலரும் நினைவுகளை பகிர்ந்தவர். அடுத்து குரல் எழுப்பி அண்ணாமலையின் பாதி யாத்திரையை அப்படியே காட்சிக்கு, காட்சி போல் அவரது வார்த்தையில் படம் பிடித்து காண்பிப்பது போல் அவரது வார்த்தைகள் வெளிபட்டது.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்களை கண்டித்தவர். நீட் தேர்வால் நம் செல்வங்களின் மருத்துவ கனவை பாலைவனமாக்கும் ஆளுநர் தமிழகத்தில் இருந்து அகற்றப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என தெரிவித்தவர்.
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதம் பதித்து சென்றது தான் நடைபயணம் என பாராட்டினார்.
இந்திய வரலாற்றில் தொடர்ந்து மூன்று முறை பிரதமர் பதவியை அலங்கரித்தவர் ஆசிய ஜோதி ஜெவஹர்லால் நேரு மட்டுமே அந்த வரலாற்று புகழை வெல்லும் தகுதி இன்னொரு இந்தியனுக்கு இனி இல்லை.2024_நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோர்க்கடிக்கப்படும்.
தளபதி அண்ணன் முதல்வர் ஸ்டாலின் பின், அணி ஆவோம், ஆதரவாவோம். வேண்டுமென்றால் ஆயுதம் ஆவோம் என சொல்லி உறை முடித்தார்.

