
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற இந்து கோவில்களில் மிகுந்த சிறப்பு பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம் இதே போல் இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று(ஆகஸ்ட்_23)ம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது 9ம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறுகிறது இந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், சுசீந்திரம் முத்து, வட்டார தலைவர்கள் காலபெருமாள், முருகேசன், குமரி மாவட்ட திருகோவில் தலைவர் பிரபா இராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
