• Mon. Apr 29th, 2024

கிராமத்து மாணவனின் இசை வடிவிலான திருக்குறளுக்கு உலக சாதனை…

ByKalamegam Viswanathan

Aug 25, 2023

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள ஏலாக்கரை பகுதியில் வசித்து வரும் 14 வயது மாணவன் பெதனி நவ ஜீவன் சி பி எஸ் சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகின்றவர் தான் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ். இவர் தனது சிறு வயது முதல் விழிப்புணர்வு பாடல் நாட்டியம் மின்விசை பலகை வாசித்தல் கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு) ஆகியவற்றில் சாதனைகள் படைத்துள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு பாடல் வாயிலாக வெளி உலகத்திற்கு தெரிய வந்த இவர் அண்மைக்காலமாக திருக்குறளை மையமாகக் கொண்டு ஒரு சாதனையை படைக்க வேண்டும் என்கின்ற ஆவலில் 1330 திருக்குறளை இசை வடிவமாக 133 நாட்களில் வழங்கி புதிய உலக சாதனை படைத்துள்ளார். அவர் ஒரு நாளைக்கு 1 அத்தியாயம் (10 திருக்குறள்) மற்றும் திருக்குறளை இசை வடிவமாக தனது சொந்த இசையுடன் வழங்கியுள்ளார். இந்த சாதனையை 13 ஜுலை 2023 அன்று ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து தற்போது உலக சாதனை சான்றிதழ் கேடயம் மெடல் வழங்கி உள்ளது. திருக்குறளை சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்புரை செய்துள்ளார் என்பது சிறப்புக்குரியது. ஜோ.ஸ் தீரஜ். அவர்களை சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *