• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கலைஞர் நூற்றாண்டு விழா.., மரம் நடும் நிகழ்ச்சி…

ByKalamegam Viswanathan

Jul 12, 2023

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வைத்தார்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் பொன் தம்பி மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். கவுன்சலர்கள் முனிஸ்வரி, இனியவன் , முகமது முஸ்தபா, சரஸ்வதி பாண்டியன், சங்கரேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.