போஸ்டர் மற்றும் கட்டவுட் வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட மாநகர திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்த பின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள சூழ்நிலையில் தற்பொழுது திமுக தலைமை அறிவித்த மாநகர திமுக செயலாளர் ராஜேஷ் என்பவரை மாற்றக்கோரி இந்த போஸ்டர் திமுகவினரால் வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் ஆக இருந்த செந்தில் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மரணம் அடைந்தார். மாநகர திமுக செயலாளர் பதவியை பிடிக்க பல்வேறு திமுக நிர்வாகிகள் இடம் கடும் போட்டி நிலவியது..
இந்த மாநகர திமுக செயலாளர் பதவியை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பெற்றுத்தர தனித்தனி குழுக்களாக இம்முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் திடீரென திமுக தலைமை கடந்தசில மாதங்களுக்கு முன்பு மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம் எம் அப்துல்லாவின் ஆதரவாளரான ராஜேஷ் என்பவரை புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் ஆக திடீரென அறிவித்தது.

இதனை எதிர்த்து புதுக்கோட்டை மாநகர திமுக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி திமுக உறுப்பினர்கள் ஆகியோர் போர்க்கொடி தூக்கினர். திமுக நடத்திய கூட்டங்களில் வாக்குவாதம் தகராறு என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சாலை மறியல் போராட்டம் என நடந்தது.
இந்நிலையில் இன்றுதற்பொழுது கலைஞர் 102. வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் தற்பொழுது திமுக நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக திமுக மாவட்ட அலுவலக முன்பாக எதிர்ப்பு போஸ்டர்கள் வைத்ததால் தற்பொழுது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கும் பொருட்டு தற்பொழுது புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது திமுகவினர் இரு பிரிவுகளாக இன்று புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலக வாயிலில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு போட்டி போட்டுக் கொண்டு மாலை அணிவித்து கலைஞர் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.