இந்தியாவில் மீண்டும் அகிர்(யாதவ) ரெஜிமெண்ட் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அகில இந்திய யாதவ மகாசபை சார்பாக ரஸ்லாக் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் வீர மரணம் அடைந்த யாதவ ராணுவ வீரர்கள் மண் கலசயாத்திரை நாடு முழுவதும் கொண்டு சென்று வழிபாடு நடத்தி வரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் நாசே ராமச்சந்திரன் வழிகாட்டுதலின் பேரில் விருதுநகர் மாட்டம், திருவில்லிபுத்தூர் ஒன்றியம், பெருமாள்தேவன்பட்டி கிராமத்திற்கு இராணுவ மண் கலசயாத்திரை வந்தது . அதனை விருதுநகர் மாவட்ட தலைவர் வி.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக வரவேற்று மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாகம் சார்பாக முன்னாள் இராணுவத்தினர், மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை நிறைவேற்றக்கோரி கோசம் எழுப்பப்பட்டது.

உடன் யாதவ மகாசபை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் தலைவரும் முன்னாள் இராணுவ வீரருமான முத்துராக்கன், 5 ஊர் பொருளாளர் கோவிந்தராஜ், யாதவ மகாசபை பொருப்பாளர் தமிழ்நெஞ்சம் ஆகியோர் செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக மண் கலசயாத்திரை திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சென்று அங்கு கோரிக்கை சம்மந்தமான துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டு பின்னர் ரதம் மதுரை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது.