• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வலியுறுத்தி ராணுவவீரர் அயோத்தி பயணம்…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சோமநாதபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். ராணுவ வீரரான அவர் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை நேற்று டிரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது கொரோனா வைரசால் பொதுமக்கள் அனைவரும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதை தவிர்க்க பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும். இதை வலியுறுத்தி 197 நாட்டு கொடியுடன் ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி வரை 3 மாத காலம் விழிப்புணர்வு செய்ய உள்ளேன். பொதுமக்கள் இழப்பை தவிர்க்க வேண்டுமானால் கண்டிப்பாக கருணா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.