• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யப் போகும் மாவட்டங்கள்

தென் தமிழக கடற்கரையை ஒட்டி 3.6 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டி இலங்கைப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்-ஐ ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.