சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் பிரேம்ஜி வில்லனாக நடிப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதுவரை பிரேம்ஜி காமெடி நடிகராக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் குணசித்திர வேடத்தில் கூட அவர் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 20 என்ற படத்தில் பிரேம்ஜி காமெடி கலந்த வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக இயக்குனர் அனுதீப் தெரிவித்துள்ளார்.
இந்த படம் ஆரம்பிக்கும் போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் மட்டுமே உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது நான்கு மொழிகளில் படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதனால் தமிழ் மொழிக்கு மட்டுமே வில்லனாக பிரேம்ஜி நடிக்கிறாராம். மற்ற மொழிகளுக்கு எல்லாம் அந்தந்த மாநில நடிகர்களை ஒப்பந்தம் செய்ய உள்ளதாம் படக்குழு. இதனால் ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு நடிகர்கள் வில்லனாக நடிக்க உள்ளார்களாம்!