• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்களா?

ByA.Tamilselvan

Jul 27, 2022
ஈரோட்டில் தீவிரவாதிகள்  பதுங்கியிருக்கலாம் என்ற  சந்தேகத்தின் அடிப்படையில்  என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி  வருகின்றனர்.

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
ஈரோடு போலீசாருடன் சேர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட ஈரோடு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனையிட்டனர்.அப்போது அந்த வீட்டில் 5 பேர் ஒரு குடும்பமாக வசித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு இருந்த 2 பேரை மட்டும் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணையை தீவிரபடுத்தினர்.
. இதுகுறித்து போலீசார் கூறும்போது, பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24ஆம் தேதி கைது செய்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஈரோடு மாணிக்கம் பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றனர். இந்த நிலையில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகித்து இருவரை பிடித்து விசாரணை நடத்தும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.