• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

‘அராபிக் குத்து’ – பிரபலங்களின் ரியாக்ஷன் என்ன?

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடலின் லிரிகல் வீடியோ நேற்று வெளியானது!

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் பிப்ரவரி 14 ம்தேதி வெளியிடப்படும் என கடந்த வாரம் சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

அரபிக்குத்து என பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபஸ்ட் சிங்கிள், ஹலமதி ஹபிப்போ என துவங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோநிதா காந்தி பாடி உள்ளனர். இந்த பாடல் வெளியிடப்பட்ட 5 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. 1.7 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.

இந்த பாடல் குறித்து, பிரபலங்கள் ரியாக்ஷன் என்ன!

அட்லீ
என்னுடைய ஃபேவரைட் பாடல் வெளிவருவதற்காக நீண்ட காலம் காத்திருந்தேன். அனிருத் மாஸ் பேபி. விஜய் அண்ணா லுக் மிரட்டலா இருக்கு. டான்ஸ் மூவ்ஸ் வாவ்…தியேட்டரில் பார்க்க காத்திருக்க முடியவில்லை. நெல்சன் திலீப்குமார் அண்ணா மஸ்து மாஸ். சிவகார்த்திகேயன் சூப்பர்டா. அரபிக்ல மாசு.

அருண் விஜய்
கேரள-கொல்லம் தியேட்டரில் அரபிக்குத்து கலை கட்டுது. மாஸ் பெர்ஃபாமான்ஸ்

தர்ஷன்
அரபிக்குத்து வேற லெவல் குத்து. வாவ்வ்வ்வ்… தளபதி Full of repeat mode.சிவகார்த்திகேயன் அண்ணா லிரிக்ஸ் செம.

விக்னேஷ் சிவன்
Swaggggg maxxxx…வேற லெவல் எனர்ஜி. சூப்பர் ஃபன் வைப்ஸ் உண்டு பண்ணிட்டிங்க தளபதி விஜய் சார். தீ மோட். அரபிக் வார்த்கைளில் சூப்பரான வாய்ஸ் அனிருத். வாழ்த்துக்கள் நெல்சா.

சஞ்சய் விஜய்
தற்போதைய பார்வைகள் 10 மில்லியன் வ்யூஸ். அரபிக் குத்து வேற மாரி ரெஸ்பான்ஸ்.

பரத்வாஜ்
இப்போ தான் கேட்டேன் அரபிக்குத்து. செம எனர்ஜி. பீஸ்ட் டீமுக்கு என் வாழ்த்துக்கள்.