• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஏப்ரல் 23 உலக புத்தக தினம்

ByA.Tamilselvan

Apr 23, 2022

புத்தகங்கள் வீட்டை மட்டுமல்ல நம் வாழ்க்கையும் அழகாக்கும் “தலைகுனிந்து என்னைப்பார் தலைநிமிர்ந்து நடக்க செய்கிறேன்” -இந்த வரிகள் புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்துபவை.
30 ஆண்டுகளுக்கு முன் அனைவரின் கைகளிலும் புத்தகமோ அல்லது மாத,வார இதழ்களோ இருக்கும் . ஸ்மாட் போன் வருகை அதனை முற்றிலுமாக மாற்றிவிட்டது எனலாம்.புத்தகங்கள் எல்லாம் தற்போது மின் நூல்களாக மாறிவிட்டன. அமேசான் உள்ளிட்ட பல தளங்கள் மின்நூல் விற்பனையை ஊக்குவித்து வருகின்றன.கைபேசிலேயே புத்தகங்கள் மாத.வார.தினசரி இதழ்களை படிக்கும் வசதி தற்போது எற்பட்டுள்ளது. அச்சு புத்தகங்களின் வாசிப்புகுறைந்திருந்தாலும் மின் நூல்கள் வாசிப்பு அதிகரித்து வருகின்றன எனலாம். கடந்த நூற்றாணடில்உலகை மாற்றிய பல தலைவர்களுக்கு புத்தகமே ஆயுதமாகஇருந்தது எனலாம்.மகாத்மா காந்தியிலிருந்து பலரும் புத்தகங்கள் குறித்து சொன்ன கருத்துக்கள் அற்புதமானவை.
உடலுக்கு எப்படி உடற்பயிற்சி அவசியமோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு – உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டு.
லண்டன் சென்றிருந்த அம்பேத்காரிடம் அவரது நண்பர்கள் எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது…எது நூலகத்துக்கு அருகில் உள்ளதோ அங்கே என்றார்– .
தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை லெனின் எழுதிய அரசு என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி
நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. – மார்க் டிவைன்
குழந்தைகளைக் கவர பல கேளிக்கை உலகத்தையே ஏற்படுத்தினேன். அவை எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன – வால்ட் டிசினி
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குபவர் – சார்லி சாப்லின்
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.
இப்படி உலகத்தலைவர்களை பேச வைத்த புத்தகத்தை அச்சுபுத்தகமாக இல்லாவிட்டாலும் மின் நூலக்ளாக படிக்க வேண்டியது அவசியம். நாம் மட்டுமல்ல எதிர்கால சந்ததியினருக்கும் புத்தக வாசிப்பு பழகத்தை உருவாக்கவேண்டும்.