• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கோவை துடியலூர் அருகே சுமார் 12 கிலோ கஞ்சா பறிமுதல்..,

BySeenu

Mar 24, 2026

கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிலையம் அருகே இரவு 12 மணியளவில் கோ- ஆப்ரேட்டிங் வங்கி சப்-ரிஜிஸ்டர் அரவிந்த்குமார், இன்சார்ஜ் பசவகுமார் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையில் துடியலூர் போலீசார் ஆகியோர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஆட்டோவில் இருந்த 2 பேர்கள் திடீரென தப்பி ஒடினர். உடனடியாக தேர்தல் பறக்கும் படையினர் அந்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்த போது, அவர் துடியலூர் ஆட்டோ ஸ்டாண்ட்டில் ஆட்டோ வைத்திருந்ததாகவும், அப்போது 2 பேர் தொப்பம்பட்டிபிரிவு செல்ல வேண்டும் என்று ஆட்டோவில் ஏறியதாகவும், தற்போது அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர் என்று தெரிவித்தார். தொடர்ந்து தப்பி ஓடியவர்கள் ஆட்டோவில் விட்டுசென்ற பைகளை சோதனை செய்தபோது, அதில் சுமார் 12 கிலோவுக்கும் மேலாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அதன் பின்னர் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.