சொத்துக்களை அபகரிக்கும் நோக்கோடு செயல்பட்டு வரும் பழனி செட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வயதான மூதாட்டி சீனியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் டிபிஎன் ரோட்டில் குடியிருந்து வருவர் மாயாண்டி மனைவி சீனியம்மாள் (78) தனது மகன் மாற்றுத்திறனாளி ஞானசேகரன் உடன் குடியிருந்து வருகிறார்.
இவருடை வீட்டின் குடிநீர் குழாய், மற்றும் கழிவு நீர் குழாய்களை பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி, செயல் அலுவலர் துணையுடன், ஊழியர்களை வைத்து உடைத்து விட்டனர்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சத்தியம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி காரணமாக பழனிசெட்டிபட்டி சேர்மன் மற்றும் பழனிசெட்டிபட்டி அலுவலக பணியாளர்கள் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சீனியம்மாளின் வீட்டிற்கு மீண்டும் குடிநீர் இணைப்பு மற்றும் கழிவு நீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.
தற்பொழுது சீனியம்மாள் வசிக்கக்கூடிய தெருவில் உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் குடிநீர் குழாய்கள் இணைப்பு எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றியும் துண்டிக்கப்பட்டது.
இதனால் வயதான மூதாட்டி சீனியம்மாள் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்.
சீனியம்மாளின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வரும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் அமாவாசை மகன் மிதுன் சக்கரவர்த்தி, மற்றும் இவருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் செயல் அலுவலர், அலுவலகப் பணியாளர்கள் இரண்டு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வயதான மூதாட்டி சீனியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.













; ?>)
; ?>)
; ?>)