• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே கீழே கிடந்த கொலுசை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்

ByKalamegam Viswanathan

Sep 22, 2024

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் கீழே கிடந்த வெள்ளி கொலுசை விக்கிரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் மற்றும் கிராம பொதுமக்கள் பாராட்டினர்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு சி பிரிவை சேர்ந்த ஆறு மாணவர்கள் நேற்று மதியம் ரோட்டில் கீழே கிடந்த வெள்ளி கொலுசை கண்டெடுத்தனர். இதை விக்கிரமங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்து விக்கிரமங்கலம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் காமாட்சியிடம் வெள்ளி கொலுசை ஒப்படைத்தனர். கீழே கிடந்த வெள்ளி கொலுசை போலீசாரிடம் ஒப்படைத்த ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஆறு பேரை மட்டும் போலீசார், கிராம பொதுமக்கள் பாராட்டினர்.