• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழா

ByKalamegam Viswanathan

Feb 7, 2023

மதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் விருது பெற்றதற்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா
மலேசிய நாட்டின் கோலாலம்பூரில் சர்வதேச அளவில் நடைபெற்ற “அகில உலக கருத்தரங்கு நிகழ்ச்சியில் “அணு ஆயுதப் போர் நிறுத்தம்” மற்றும் “உலக அமைதி” குறித்த சிறப்பான கருத்துகளைப் பதிவு செய்த மதுரை சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஓவியா ஆனந்திக்கு சர்வதேச அமைப்பு “சிறந்த சிந்தனை பேச்சாளருக்கான விருதை” வழங்கி கவுரவித்துள்ளது. பள்ளிப் பருவத்தில் 17 வயதுப் பிரிவில் இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார்
மேலும் இந்த கருத்தரங்கில் 90 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவி ஓவியாவை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் பாராட்டினார். மேலும் ஆனந்தியின் தனித்திறனை கவுரவிக்கும் விதமாக அவரது பள்ளியில் ‘பாராட்டு விழா’ நடைபெற்றது. அதில் ஓவியா ஆனந்தி மலேசிய கருத்தரங்கில் பகிரப்பட்ட கருத்துகளை தன்பள்ளி மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.தொடர்ந்து மாணவ, மாணவிகளும், பள்ளியின் நிர்வாகிகளும் மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.