• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய எஸ்பி நியமனம்.., தமிழக அரசு அதிரடி உத்தரவு…

ByG.Suresh

Feb 28, 2024

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் துணை ஆணையராக ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 4 மணியளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.