• Sun. May 5th, 2024

செந்தில்பாலாஜி ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி

Byவிஷா

Feb 28, 2024

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுடி செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கை 3 மாதத்தில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக அமலாக்கத்துறை விசாரணை வட்டத்தில் நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி உள்ளார். அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கானது எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பல்வேறு முறை உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரியுள்ளது.
இதுவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்வு நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பல்வேறு முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தும் அவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு முன்னதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த ஜாமீன் மனுவானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி ஜாமீனை வழங்க மறுத்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தினசரி விசாரணை அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *