• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Byவிஷா

Jun 3, 2024

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று ஜூன் 3 முதல் ஜூன் 21ம் தேதி மாலை 5 மணி வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://adm.tanuvas.ac.in/ மூலமாக பெறப்படுகிறது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கலை அறிவியல், பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விறுவிறுப்பாக சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://adm.tanuvas.ac.in/மூலமாக இன்று ஜூன் 3 முதல் ஜூன் 21ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படுகிறது. வெளிநாடுவாழ் இந்தியர், அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இடஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.