• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி..,

ByP.Thangapandi

Jul 22, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் பாண்டியராஜன், பால்த்துரை ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதை பொருள் தடுப்பு குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

மேலும் போதை பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், போதை பழக்கத்தினால் சீரழிந்த குடும்பங்களின் நிலை, போதை பொருள் பயன்படுத்தினால் நமது உடலில் ஏற்படும் வியாதிகள் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.,

மேலும் உங்கள் ஊரில் சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.,

மேலும் தங்களது குடும்பத்தில் யாரேனும் போதை பொருள்கள் பயன்படுத்தினால் அவர்களிடம் எடுத்துரைத்து அதனை தடுக்க முயற்சி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.,

அதனை தொடர்ந்து போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது பள்ளியில் துவங்கி தேனி சாலை, புதிய பேருந்து நிலையம், தேவர்சிலை உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக சென்று பள்ளியில் நிறைவுற்றது., இதில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் பள்ளி தலைமையாசிரியர் அருள்லூயிஸ் மெர்சி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் பங்கேற்றனர்.