• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கிராம நிர்வாக அலுவலரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை..,

ByP.Thangapandi

Mar 23, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராமன், தனது தந்தை இறப்புக்கு பின் தந்தை பெயரில் வேப்பனூத்து கிராமத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை, தனக்கு, தனது தாய் மற்றும் சகோதரி உள்ளிட்டோருக்கு பட்டா மாறுதல் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் ஆன் லைன் மூலம் விண்ணப்பம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விண்ணப்பம் தொடர்பாக விசாரணை செய்து பட்டா மாறுதல் செய்து தர சம்மந்தப்பட்ட வேப்பனூத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா ரூபாய் 5 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து முத்துராமன், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்., லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் இன்று ரசாயணம் தடவிய 5 ஆயிரம் ரூபாய்-யை உசிலம்பட்டி வருவாய் அலுவலர் அலுவலகத்தில் வைத்து முத்துராமன், விஏஓ சுப்பையாவிடம் வழங்கிய போது மறைந்திருந்த மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ சுப்பையாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.