• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வழி விடு பாலமுருகன் கோவில் சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Mar 23, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் வழி விடு பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது .

அதில் வழி விடு பாலமுருகனுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் தாயில்பட்டி ஊராட்சி செக்கடி தெருவில் வன்னி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.