• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கூடலூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை- இருவர் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் தனது புதிய வீடு கட்டுவதற்கான கதவு எண் வேண்டி நகராட்சியில் மனு அளித்ததாக தெரிகிறது அப்போது கூடலூர் நகராட்சியில் பில் கலெக்டர் மற்றும் வருவாய் உதவியாளர் ஸ்ரீஜித் என்பவரை அணுகியுள்ளார்.ஸ்ரீஜித் கூடலூர் ஒன்றாவது மயில் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.அதே கூடலூர் நகராட்சியில் தற்காலிக பணியாளராக நடு கூடலூர் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஸ்ரீஜித்துடன் இணைந்து பணியாற்றியதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் தொரப்பள்ளியைச் சேர்ந்த மணிகண்டன் இடம் ஸ்ரீஜித் புதிய கதவு எண் வாங்க ரூபாய் 11,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது இதனைத் தொடர்ந்து மணிகண்டன் நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்ததின் பேரில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூடலூர் சென்று லஞ்சப் பணம் பெறும்போது ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து ஸ்ரீஜித் மற்றும் ஸ்ரீஜித்தின் உதவியாளர் தற்காலிக பணியாளர் ரமேஷ் ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.மேலும் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..