

திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசி மாத திருநாளை முன்னிட்டு 14.2.2022 முதல் 23.2.2022 வரை, வெயிலுகந்தம்மன் திருவிழாவின் பத்தாம் நாள் நிகழ்ச்சியாக இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
கோயிலில் இன்று மாசித் திருநாள் நிறைவுபெறுவதை முன்னிட்டு, வெயிலுகந்தம்மன் காலை, இரவு தங்க ரிஷப வாகனத்தில் பூ சப்பரம் அலங்காரத்தில், மூன்று வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்! மேலும் அம்மனுக்கு பதினொரு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது! நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!



