• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நார்த்தாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டாய்வு..,

Byமுகமதி

Jun 16, 2026

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டாய்வு
இன்று 16/06/2026 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதுசமயம் உலக சுற்றுச்சூழல் தினத்தை அனுசரிக்கும் விதமாக முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

காலை வணக்கக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் மாணவர்களிடம் பேசுகையில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்தும், பூமிப்பந்தைப் பாதுகாக்க மாணவர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு )எம் புஷ்பலதா, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் செல்வராஜா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து, தலைமையாசிரியர்கள் இளஞ்சேகரன், கண்ணன், பழனிவேல் ஆசிரியர்கள், செல்வேந்திரன், கணேசன். ராஜாங்கம், மணிகண்டன், பீட்டர் ஜெயசீலன், முத்து, கருப்பையா உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.