• Wed. Sep 11th, 2024

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் ஆண்டு விழா

ByKalamegam Viswanathan

Apr 14, 2023

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறன்களை வெளிப்படுத்தினார்கள் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மாறுவேட போட்டிகள் மற்றும் தேசப்பற்றை விளக்கும் நாடகங்கள் நடைபெற்றது
.பள்ளியின் தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார் பள்ளி தாளாளர் எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் கௌரவ ஆலோசகர்மான ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் துணை தலைவர் லதா கண்ணன் கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் வசந்தி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் .

வாடிப்பட்டி வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான் அகிலத்து இளவரசி வட்டார வள மையம் மேலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள் ராயபுரம் ஆர் சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பணி மாதா சோழவந்தான் ஆர் சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெப ராணி உடற்கல்வி ஆசிரியர் ஆசிர் பிரபாகர் பி சி செயலாளர் மணிமேகலை பிசி பொருளாளர் ஜாஸ்மின் ஜெனிபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்உதவி ஆசிரியை பிரேம்குமாரி ஆண்டறிக்கை வாசித்தார் நிகழ்ச்சி நிறைவாக உதவி ஆசிரியை திவ்யா நன்றியுரை ஆற்றினார் மாணவ மாணவிகளுக்கு தங்கப்பதகங்களை பிராங்கிளின் ஆசிரியர் நினைவாக ஆசிரியர் ராஜாமணியும் வெள்ளி பதக்கங்களை ஆதிமூலம் பிள்ளை மற்றும் சரஸ்வதி அம்மாள் நினைவாக தேவிகா பெருமாலும் வழங்கினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *