• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க பள்ளி ஆண்டு விழா… மாவட்ட சேர்மன் மு.பொன்தோஸ் பங்கேற்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கத்தின் கிளை நிறுவனமான விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் மழலையர் தொடக்கப்பள்ளியின் 20- வது ஆண்டு விழா நடந்தது.

“ஸ்பெக்ட்ரா-2022” என்ற தலைப்பில் நடந்த இப்பள்ளி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட சேர்மன் மு.பொன் தோஸ் பங்கேற்று மாணவ மாணவிகளின் தனித்திறமைகளை கண்டு களித்து பாராட்டியதோடு, பரிசுகளையும் வழங்கினார். மேலும் இவ்விழாவில் கவுரவ விருந்தினராக கோத்தகிரி காவல்த்துறை இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கோத்தகிரி பஞ்சாயத்து சேர்மன் ராம்குமார், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, ஈரோடு நாவா சோம சுந்தரம், சண்முகம், சுப்பிரமணி, ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் மு. ஆல்வாஸ், பள்ளி முதல்வர் பூவிழி ஆகியோர் செய்திருந்தனர்.